திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆவடி மாநகராட்சி பூந்தமல்லி, திருவேற்காடு திருநின்றவூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மக்கள் அடிப்படை தேவைகளை விரைந்து முடிக்க அறிவுருத்தினார். ஒவ்வொரு நகரமன்ற தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். அப்போது பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் நாராயணன் மீது சரமாரியாக புகார் அளித்தார்.