சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஜனவரி 11) கேள்வி நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களான ஆர்.பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் தங்கள் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "மதுரை, திருமங்கலம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்டுத்தப்பட உள்ளது. இதுவரை 21 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.291.37 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. புதிதாக ரூ.500 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.