தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இணைய வழியில் மக்களை ஏமாற்றும் திமுக - ஜெயக்குமார் குற்றச்சாட்டு - DMK does not meet people directly

சென்னை: மக்களை நேரடியாக சந்திக்காமல் இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் திமுக மக்களை ஏமாற்றி வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

minister jeyakkumar
minister jeyakkumar

By

Published : Sep 23, 2020, 9:51 PM IST

சென்னை கொருக்குப்பேட்டை போஜ ராஜன் நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின் விளக்கும் அமைக்கும் பணியை அமைச்சர் ஜெயக்குமார் தனது சொந்த செலவில் செய்துகொடுத்தார். 5 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட சோலார் மின்விளக்கின் பயன்பாட்டை பார்வையிட்ட அவர், ரிமோட் மூலம் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "திமுக இணைய வழி உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களை நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்த்தால்தான் அது உண்மை. அதற்கு மாறாக இணைய வழியில் உறுப்பினர்களை சேர்க்கும் என்ற பெயரில் அவர்களது ஆள்களை வைத்து ஏமாற்றி வருகிறார்கள்.

களத்தில் இறங்கி பணி செய்யவேண்டும்

மியான்மரில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்திய கடலோர காவல் படையுடன் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக மியான்மர் நாட்டில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வெளியுறவுத் துறை உதவியுடன் தொடர்பு கொண்டு விரைவான முயற்சி எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:கால்நடை மருத்துவப் படிப்பில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details