தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒற்றை தலைமைக்கு காலம்தான் பதில்சொல்லும்..!' - அமைச்சர் ஜெயகுமார் - single leadership

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில் சொல்லும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Jun 10, 2019, 10:23 PM IST

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து திமிங்கலம் போல் ஆட்சியை கலைக்க சதி செய்து வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில் சொல்லும். அதுவும் இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டியது அதிமுக கட்சியின் தொண்டர்கள்தான்.

வருகிற 12ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட இருக்கிறது அதிலே அவரவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது அறையிலே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இன்னும் இரண்டு ஆண்டுகள் அதிமுக அரசு ஆட்சியை யாராலும் கலைக்கமுடியாது. ஆட்சி கலைப்பது போல் ஸ்டாலின் தினமும் கனவு மட்டும்தான் காணமுடியும்.

ஒற்றை தலைமை என்பது காலம் தான் பதில்சொல்லும் - அமைச்சர் ஜெயகுமார்

அண்ணா சொன்னதைப் போல் பதவி என்பது தோளில் உள்ள துண்டு போன்றது. ஆனால் மானம் என்பது இடுப்பில் உள்ள வேட்டி போன்றது. எங்களை பொறுத்தவரை தோளில் உள்ள தூண்டை விட இடுப்பில் உள்ள வேட்டிதான் முக்கியம். எந்த நிலையிலும் பதவிக்காக யாரிடமும் சென்று நிற்க மாட்டோம். பாஜகவிற்கு எதிராக தமிழ்நாட்டில் அலை வீசுகிறது என மத்திய குழுவினரே தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் சி.வி சண்முகம் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, என்றார்.

ABOUT THE AUTHOR

...view details