சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பட்டியலின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கட்சி அதிமுகதான். கட்சியில் பெரிய பதவிகள் அளித்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து அழகு பார்த்த கட்சியும் அதிமுகதான்.
திமுகவில் பெயருக்குதான் பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் பட்டியலின மக்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்படுகின்ற நிலை உள்ளது. கு.க செல்வத்திற்கு துரைமுருகன் நன்றி சொல்ல வேண்டும். அவர் மட்டும் நீதிமன்றம் செல்லவில்லை என்றால் திமுக பொதுக்குழு கூடி இருக்காது.