தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 ஜி அலைக்கற்றை வழக்கால் திமுக வாக்கு வங்கிக்கு ஆபத்து - அமைச்சர் ஜெயக்குமார் - ஊழலின் ஒட்டுமொத்த உருவம் கருணாநிதி

சென்னை: 2 ஜி அலைக்கற்றை வழக்கு மேல் முறையீட்டுக்குச் சென்றுள்ளதால் திமுகவினரின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாகவும், இதனால் திமுகவின் வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

minister jeyakumar
minister jeyakumar

By

Published : Dec 10, 2020, 10:37 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜாஜியின் 142ஆவது பிறந்த நாள் இன்று அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை பாரி முனையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறு பேசக்கூடாது என உச்ச நீதிமன்றமே கூறியிருந்தும், ஆ.ராசா அதனை பின்பற்றாமல் பேசி வருகிறார். ஊழலின் ஒட்டுமொத்த உருவமான கருணாநிதியைப் பற்றி பேச நிறைய உள்ளது.

எங்கள் கட்சியினர் பக்குவப்பட்டவர்கள் என்பதால் மறைந்த தலைவர்களைப் பற்றி பேசமாட்டோம். நடந்து முடிந்த வழக்கைப் பற்றி பேசும் ராசாவின் பயம் அவர் பேச்சிலேயே தெரிகிறது. 2 ஜி அலைக்கற்றை விவகாரம் மேல்முறையீட்டிற்குச் சென்றுள்ளதால் திமுக வினரின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. இதனால் அவர்களின் வாக்கு வங்கிக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திமுக வினர் மீதேதொடர் ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளது. அதிமுக வினர் மீது அப்படி எந்த வழக்கும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களுகக்கு எதிராக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details