சென்னை ராயபுரத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அப்போது, பொருள்களை வழங்குவதற்காக காத்திருந்த தூய்மைப் பணியாளர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு தகுந்த விலகல் காற்றில் பறக்கவிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர், ராயபுரத்தில் உள்ள வட்டங்களில் உயிரை துச்சமென மதித்து சிறப்பாக பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில் பணப்பரிசும் மளிகை பொருள்களும் நலதிட்டமாக வழங்கப்பட்டது. கரோனா இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசும், பொதுமக்களும் ஒன்றிணைந்து செயல்படுவது மூலம் இந்நிலையை உருவாக்கலாம்.