தமிழ்நாடு

tamil nadu

`கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு`-அமைச்சர் ஜெயக்குமார்!

By

Published : Apr 30, 2021, 3:31 PM IST

சென்னை: கருத்துக் கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று, அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை பட்டினம்பாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், `கருத்துக் கணிப்பு என்பது எந்த காலத்திலும் எடுபடாத ஒன்று. அதிமுக, அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

200 பேரிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு, கருத்துக் கணிப்பு வெளியிடப்படுகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, பொதுமக்கள் மகிழ்ச்சி பெறும் வகையில் அதிமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும்.

அதேபோல் தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் இருந்த மாதிரியே, வாக்கு எண்ணிக்கை வரையிலும் உற்சாகத்தோடு இருக்க வேண்டும்.

கடந்த முறை நடந்த தேர்தலின்போதெல்லாம் கருணாநிதி இருந்தபோது, திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று போஸ்டர் எல்லாம் அடித்து வைத்தனர். ஆனால், அதிமுக மகத்தான வெற்றியை பெற்றது. எனவே திமுக ஒவ்வொரு முறையும் போஸ்டர் அடித்து தோற்றுதான் போவார்கள். அதேபோல்தான் இந்த முறையும்` என்றார்.

மேலும், பேசிய அவர் `தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது, அந்த மையங்களில் குண்டர்களை அனுப்பி வைக்கும் செயல்களை திமுக செய்யும், எனவே அதில் தேர்தல் ஆணையம் கவனமாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்` எனக் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details