தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பதவி வெறியால் தூங்காத ஸ்டாலின் பித்து பிடித்து அலைகிறார்' - அமைச்சர் ஜெயக்குமார் - Minister Jayakumar

சென்னை: பதவி வெறியால் தூங்க முடியாமல் ஸ்டாலினுக்கு பித்து பிடித்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Jul 12, 2020, 8:13 AM IST

சென்னை எழும்பூரிலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ”வீரன் அழகுமுத்துக்கோன் புகழையும் நினைவையும் போற்றும் வகையில், 1991-96 ஆட்சியில் ஜெயலலிதா இந்தச் சிலையை நிறுவினார். பாளையக்காரர்கள் யாரும் ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டக்கூடாது என கோரிய மாமன்னன். ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்காததால் மார்பில் சுடப்பட்டு, வீரவரலாறு படைத்தவன் அழகு முத்துக்கோன்.

எதிர்க்கட்சிகள் நல்ல ஆலோசனையை வழங்கினால் செயல்படுத்துவோம். அதனை விடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை போர் செய்துவருகிறார். தினமும் பொழுது விடிந்தால் போதும் உடனே அறிக்கை வெளியிட்டுவிடுகிறார். அவரது அறிக்கை உள்நோக்கம் கொண்டதாகும். விஷமத்தனமாக கேலியும் கிண்டலுமாக இருப்பதால் அவரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஸ்டாலின் அறிக்கையும் குளறுபடி, பேச்சும் குளறுபடி, கட்சியும் குளறுபடி அதனால் குழப்பத்தின் உச்சம் என்றால் அது திமுகதான். பதவி வெறி ஸ்டாலினை தூங்கவிடவில்லை, தூங்காமல் இருப்பதால் பித்து பிடித்த நிலையில் இருக்கிறார். இதனால் எதைச் செய்கிறோம் எதைப் பேசுகிறோம் என்று தெரியாமல் ஸ்டாலின் பேசிவருகிறார்” என்றார்.

இதையும் படிங்க:அரிமாநெஞ்சன் அழகு முத்துக்கோனின் தியாகத்தைப் போற்றுவோம் - ஸ்டாலின் அறைக்கூவல்

ABOUT THE AUTHOR

...view details