தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி சேகர், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பினார்.
மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் வாழலாம் - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: தமிழகத்தில் தரமான மீன்கள் விற்கப்படுவதாகவும் மீன் சாப்பிட்டால் நூறாண்டுகள் உயிர் வாழலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சட்டப்போரவையில் தெரிவித்துள்ளார்.
அவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பது வெறும் வதந்தி, அதை நம்ப வேண்டாம். சுகாதாரத்துறை உணவுத் துறை மீன்வளத் துறை அதிகாரிகள் அதிக மீன்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தரமான மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
மதுரையில் வெளி மாநிலங்களிலிருந்து மீன்கள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது. உடனடியாக அந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் தரமான மீன்களே விற்கப்படுகின்றன. மேலும் மீன் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழலாம் என அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.