தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அதிமுக தலைமையில் மெகா கூட்டணி’: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக தலைமையில் அமையும் மெகா கூட்டணியில், தற்போது திமுகவில் இருப்பவர்களும் வந்து இணைவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

minister jayakumar
அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Dec 13, 2020, 3:31 PM IST

சென்னை ஓட்டேரி பகுதியில் அமைந்துள்ள சிறப்பு வாக்காளர் முகாமை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.

தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், ”ரஜினிகாந்த் முதலில் கட்சி தொங்கட்டும். அதன் பின்னர் அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்.

தேமுதிக, பாமகவுடன் கூட்டணி தொடர்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அந்த கூட்டணியில் திமுக அணியில் இருப்பவர்கள் வருவார்கள், இது உறுதி.

அமைச்சர் ஜெயக்குமார் பேசிய காணொலி

திமுகவிற்கு மத்தியில் அதிகாரம் இருந்தும் தமிழ்நாட்டிற்கு எவ்வித நல்ல திட்டமும் கொண்டுவரவில்லை. தமிழ்நாடு சீரழிந்ததற்கு காரணம் திமுகதான்” என்றார்.

இதையும் படிங்க: வரதராஜ பெருமாளை தரிசித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

ABOUT THE AUTHOR

...view details