தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்து விட்டு சுதீஷ் பேசுகிறார்- அமைச்சர் ஜெயக்குமார் - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்து விட்டு சுதீஷ் பேசுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar
jayakumar

By

Published : Mar 9, 2021, 6:12 PM IST

Updated : Mar 9, 2021, 6:19 PM IST

அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதையடுத்து தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும். கே.பி முனுசாமி பாமகவின் ஸ்லீீப்பர் செல்லாக செயல்படுகிறார். தேமுதிகவிற்கு இன்று தான் தீபாவளி என்று தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டி கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தேமுதிக கூட்டணியிலிருந்து விலகுவது துரதிஷ்டவசமானது. தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்த நன்றியை மறந்துவிட்டு சுதீஷ் பேசுகிறார். 234 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். கூட்டணியில் இருந்தபோது சுதீஷ் பேசிய பேச்சை பொறுத்துக் கொண்டோம், ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அநாகரிகமாக பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதிமுக பற்றி விமர்சனம் செய்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க நேரிடும். தேமுதிகவின் வாக்கு வங்கி, தற்போதைய செல்வாக்கு அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தோம். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை கேட்டுப் பெறுவது தான் புத்திசாலித்தனம், புத்திசாலித்தனத்துடன் தேமுதிக செயல்படவில்லை என்று ஜெயக்குமார் கூறினார்.

Last Updated : Mar 9, 2021, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details