தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வர வாய்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார் - chennai district news

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் சமயத்தில் அதிமுகவிற்கு வர வாய்ப்புள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வர வாய்ப்பு என பேட்டி
திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வர வாய்ப்பு என பேட்டி

By

Published : Jan 14, 2021, 5:41 PM IST

சென்னை ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார், "பொங்கல் திருநாள் என்பது சாதி, மதம் பாராமல் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை. பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் கொண்டாட அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 பணம் வழங்கியுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு வர வாய்ப்பு என பேட்டி

சசிகலாவை உயர்த்திப் பேசினாலும் வால் பிடித்து பேசினாலும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி பேசினால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது அல்லது சின்னத்தை முடக்க நினைத்த அமமுக ஒரு நாளும் அதிமுகவுடன் சேர முடியாது.

திமுக, அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. அதிமுக அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறது.

2ஜி ஊழல் வழக்கில் திமுகவினர் சுருட்டிய ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி பணத்தை நாட்டுடமை ஆக்கினால் ஒட்டுமொத்த கடன் பிரச்னையும் தீர்ந்து விடும். அதிமுக கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும். அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையே எந்தவித சிக்கலும் இல்லை. திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் சமயத்தில் அதிமுகவிற்கு வர வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அதிமுக அமைச்சர்...காரணம் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details