சென்னை, ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், பெரிய பாளையத்தம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டார். அதன் பின்னர் மூல கொத்தளம் பகுதியில் சைக்கிள் ரிக்ஷாவில் நின்றபடி பரப்புரையில் ஈடுபட்டார். மேலும் வாக்கு சேகரிப்பின் நடுவே ஒரு குழந்தைக்கு ராமச்சந்திரன் எனப் பெயர் சூட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் திமுகவினர் அவமானப்படுத்தினர். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுவது திமுகவின் கலாச்சாரம். திமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளின் பேச்சை தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்துமே பெண்களுக்கு எதிரான இழிவுப் பேச்சு என்பது தெரியவரும்.