சென்னையை அடுத்த பெருங்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஒன்பது அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2,728 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
‘தலைவராக ஓராண்டு... தம்பட்டம் அடிக்கிறார் ஸ்டாலின்’ - ஜெயக்குமார் காட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: உலகிலேயே பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்தததை தம்பட்டம் அடித்துக் கொண்டாடுபவர் ஸ்டாலின் மட்டும் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அப்போது மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சமூகத்தில் உயர்ந்த இடத்தை அடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பாலில் கலந்துள்ள தண்ணீரை நீக்கிவிட்டு பாலை மட்டும் எடுத்துக்கொள்ளும் அன்னப்பறவையை போல், மடிக்கணினியை நல்ல வழியில் மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் மாணவர்களுக்கு தொடர்ந்து மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றும், உலகிலேயே பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்திருப்பதை நினைத்து தம்பட்டம் அடித்துக்கொள்பவர் ஸ்டாலின் தான் எனவும் விமர்சித்தார்.