சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "சென்னையில் 200 அம்மா கிளினிக் திறப்பதற்கான திட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்ட அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.30) மட்டும் பத்து மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 200பேர் வரை பயன் பெரும் வகையில், இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். மக்களவை தேர்தலின் போது பாஜக கூட்டணி தற்போதும் தொடர்கிறது.
இன்னும் தேர்தலுக்கு நாள்கள் உள்ள நிலையில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பல கட்சிகள் கூட்டணியில் வர வாய்ப்புள்ளது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்பு அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு வெளியிடும்.
அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம் அதிமுக தலைமையிலான கூட்டணி அமையும், அதில் எல்லோரும் இடம் பெறுவார்கள். இதன் பின்பு அனைத்துக் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடியை விவசாயிகள் நம்பமாட்டார்கள்!