சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தொடர்ந்து ஏழாவது முறையாகப் போட்டியிடும் இவர், இன்று (மார்ச் 15) ராயபுரம் மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "ஏழாவது முறையாக ராயபுரம் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இதில் ஐந்கு முறை வெற்றிபெற்றுள்ளேன். தமிழ்நாட்டில் குடிசை இல்லாத தொகுதியாகவும், தண்ணீர் தேங்காத தொகுதியாகவும், மின்தடை ஏற்படாத ஒரே தொகுதியாகவும் ராயபுரம் தொகுதியை மாற்றியுள்ளேன். இங்கிருக்கும் மக்களுக்கு எல்லாவிதமான அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.