தமிழ்நாடு தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கும் சூழலில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் தற்போதைய அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று (மார்ச்.22) ராயபுரம் தொகுதியில் எம்சி ரோடு உள்ளிட்ட பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் சைக்கிள் ரிக்ஷா மூலம் சிறிய தெருக்களில் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.