சென்னையில் அதிகம் கரோனா பாதிப்புக்கு உள்ளான ராயபுரம் மண்டலத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகள் போன்றவற்றை ஆட்டோவின் மூலம் சென்று வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை கரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.