சென்னை இராயபுரம் 52ஆவது வட்டம் பழைய ஆட்டுத்தொட்டி அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், “மனிதனுக்கு இரண்டு கண்களும் முக்கியம் என்பதுபோல், எங்களுக்கு கட்சி ஒரு கண், ஆட்சி மறு கண். இதில் கட்சியும் ஆட்சியும் நன்றாகவே இருக்கிறது. எனவே ஸ்டாலின் பார்வைதான் கோளாறு” எனக் கூறினார்.