சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்பாட்டு கலை இயக்கம் சார்பாக வெளியிட்ட கருத்து கணிப்பு திமுகவின் சதியாகவே பார்க்கப்படுகிறது என்றும், இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றும், இதே மாதிரி தான் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த அமைப்பு திமுக வெற்றி பெறும் என்று கூறியது. ஆனால் அதற்கு மாறாக அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே இது கருத்து திணிப்பு தான்.
'கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு' - அமைச்சர் ஜெயகுமார் - கருத்து திணிப்பு
சென்னை: பண்பாட்டு கலை இயக்கம் சார்பாக வெளியிட்ட கருத்து கணிப்பு திமுகவின் சதியாகவே பார்க்கப்படுகிறது என்றும், இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றும் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார்
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் பொழுது விடிந்தால் அதிமுக மீது குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். திமுகவினர் தொகுதிக்கு ரூ.200 கோடி கொடுத்து வெற்றி பெற விரும்புகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் தடுப்பதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.