மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஆளுநரை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தபோது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து பேசப்பட்டதா? என்ற கேள்விக்கு, ஆளுநரை முதலமைச்சர் சந்தித்தது மரியாதை நிமித்தமானது என பதில் அளித்தார்.
'ஆளுநரை முதலமைச்சர் சந்தித்தது மரியாதை நிமித்தமானது' - பேரறிவாளன்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஆளுநரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
minister jayakumar
இதைத்தொடர்ந்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிந்தது என்று கூறிய அவர், செங்கோட்டையன் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவரே விளக்கம் தெரிவித்துவிட்டதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.