தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tomato Price : பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி - அமைச்சர் ஐ.பெரியசாமி - பசுமை பண்ணை கடைகளில் தக்காளி

(Tomato Price)பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் - அமைச்சர்
பசுமை பண்ணை கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் - அமைச்சர்

By

Published : Nov 23, 2021, 9:53 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக விற்பனைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் தக்காளியின் விலை கடந்த சில நாள்களாக வெகுவாக உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

மழை தொடர்ந்தால் தக்காளியின் விலை மேலும் உயரலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "வழக்கமாக மழைக் காலங்களில் வெங்காயத்தின் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு தக்காளியின் விலை ஏறுமுகமாக உள்ளது" என்றனர்.

விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தினசரி தேவைக்கான காய்கறிகள் வெளிச்சந்தையைவிடக் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டியுசிஎஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பசுமை பண்ணை கடைகளில் தக்காளி

பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள்

தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் உட்பட 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் (குறிப்பாக தக்காளி) விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.(Tomato Price)

பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள்

இவற்றின் மூலம் குறிப்பாக வெளிச்சந்தையில் தற்போது ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வரும் தக்காளி, கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் விற்பனை செய்ய முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 MT (மெட்ரிக் டன்) தக்காளி கொள்முதல் செய்யவும், இதனை படிப்படியாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ. 17.70 கோடி மதிப்பிலான 5290 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Case filed against Tribes: பாம்புடன் வந்து முதலமைச்சருக்கு நன்றி சொன்ன பழங்குடிகள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details