தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Jewelry loan waiver: அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - ஐ. பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

Jewelry loan waiver: அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Jewelry loan waiver
Jewelry loan waiver

By

Published : Dec 30, 2021, 5:03 PM IST

Jewelry loan waiver: திண்டுக்கல்லில் ஐ. பெரியசாமி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடியில் தகுதியுடைய 10 லட்சத்து 12 ஆயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். ஒரே நபர் ஐந்து சவரனுக்கு உள்பட்டு பல கடன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எப்படி தள்ளுபடி தர முடியும்?

கவரிங் நகை வைத்து கடன் உள்பட பல்வேறு மோசடி செயல்கள் கூட்டுறவு நகைக் கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் குறைவான அளவில் கடன் தள்ளுபடி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. ஒரே வீட்டில் பலர் கடன் பெற்றிருந்தால் அவர்களுக்குச் சலுகை தர முடியாது.

22 லட்சம் பேருக்குத் தள்ளுபடி

பல வங்கிகளில் ஒரே ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஐந்து சவரனுக்கு கீழ் அடகு வைத்தவர்கள், நகை அடகுக் கடை உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்களில் அடகு வாங்கிய பொருள்களை வங்கிகளில் வைத்ததோருக்கு தள்ளுபடி செய்ய முடியாது. இது போன்ற செயல்களை முன்கூட்டியே திட்டமிட்டு அதிமுக செய்துள்ளது.

48 லட்சம் எண்ணிக்கையில் நகைக்கடன் அரசு வழங்கியுள்ளது. இது ஐந்து சவரனுக்கு உள்பட்டது மட்டுமல்ல; ஐந்து சவரனுக்கும் மேற்பட்ட அனைத்து கடன் எண்ணிக்கைதான். ஆய்வு செய்ததில் உண்மையான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்களைத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டு தள்ளுபடி செய்யப்படும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. 12 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 22 லட்சம் பேருக்கு எந்தப் பாரபட்சமும் பார்க்காமல் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் ஒரே குடும்ப அட்டையில் உள்ளவர்களுக்கு ஐந்து பவுன் மட்டும்தான் தள்ளுபடி செய்யப்படும்.

பயிர்க்கடன் பெற்று ஏமாற்று வேலை

ஒரே குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் தனித்தனியாக நகை வைத்திருந்தாலும் அதனைத் தள்ளுபடி செய்ய முடியாது. ஐந்து பவுன் மட்டும்தான் தள்ளுபடி செய்ய முடியும். கடந்த ஆட்சிக் காலத்தில் கவரிங் நகைகளை வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது தொடர் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் பயிர்க்கடன் பெற்றுக் கொண்டு விவசாயம் செய்யாமல் கடன் பெற்று ஊழல் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை. நகைக்கடன் தள்ளுபடி நிபந்தனை பற்றி அதிமுக பேசக் கூடாது. அதிமுக ஆட்சியில் தேர்தலே நடத்தாமல் தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகக்குழு இன்றும் உள்ளது. வருமான வரி கட்டுபவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை” என்றார்.

இதையும் படிங்க: Sahitya Akademi Award: எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details