தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆசை இருக்கு ஆனால் காசு இல்லை" - அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

தங்களுக்கும் கார் கொடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரஸாக சத்தமிட்ட போது மனது கடல் போல் உள்ளது ஆனால் நிதி ஆதாரம் சுருங்கியுள்ளது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பதிலளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 31, 2023, 2:00 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு வியாழன் அன்று பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ஊராட்சி அலுவலகர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். அதனை நிறைவேற்றும் விதமாக 244 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், 388 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்களுக்கு வழங்க Scorpio Classic கார் வழங்கப்பட்டுள்ளதாகவும், 19 மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு TATA SAFARI கார் வழங்கவுள்ளதாக கூறினார். முதலமைச்சருக்கு எவ்வளவு பெருந்தன்மை பாருங்க. நிதி மட்டும் இருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வார். இது அனைவருக்குமான அரசு என கூறினார்.

அப்போது அவையில் இருந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுக்கும் கார் கொடுங்க என கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, மனது கடலை போல விரிந்திருக்கிறது. நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கிறது. அதற்கு யார் காரணம் யார் என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என கூறினார். அமைச்சரின் பதிலை கேட்டு அவையில் இருந்த முதலமைச்சர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.

இதையும் படிங்க: கோவையின் ரூட்டு தலைவி.. பேருந்து ஓட்டும் ஷர்மிளா!

ABOUT THE AUTHOR

...view details