சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, தகுதி உடைய 14,51,042 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் வரை 12 லட்சம் பேருக்கு (97%) நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தநிலையில், தற்போது மேலும் 2 லட்சம் (3%) பேர் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 5 ஆயிரத்து 296 கோடி அளவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி விடுவிப்புக்கான ரசீது மார்ச் 28ஆம் தேதியே வழங்கப்படும்' - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு