தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூல் - எச்சரித்த அமைச்சர்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து அலுவலர்கள் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப்டும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூல்
நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூல்

By

Published : Feb 10, 2022, 6:38 AM IST

சென்னை:நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நெல் கொள்முதலில் சிப்பத்துக்கு ரூ.30 கொடுத்துக் காவிரி நெல்லைச் செல்லுபடியாக்க வேண்டும். ரூ.30 என்பது இடம், காலம் பொறுத்துக் கூடுமே தவிர குறையாது” என்று செய்திதாளில் எழுதியிருந்ததை முதலமைச்சர் படித்து என்னை செல்போனில் உடனே அழைத்து இதுபோன்று தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தவறு எங்கு நடந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நெல் கொள்முதலில் எவ்விதத் தவறும் நடைபெறக்கூடாது என்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

நெல் கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு கொடுக்கப்பட்டு வந்த ரூ.3.25 என்ற ஊதியத்தை, ரூ.10 உயர்த்தியதோடு பருவகால பட்டியல் எழுத்தர்களுக்குத் தினப்படியாக ரூ.120 மற்றும் பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100 கூடுதலாக வழங்க ஆணையிட்டார்.

கடந்த ஆட்சிக் காலத்திலிருந்ததைப் போன்று நெல் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40 பெற்றதை நிறுத்துவதோடு இந்த ஆட்சியில் விவசாயிகளிடமிருந்து ஒரு பைசா கூட பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காகத்தான் ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.83 கோடி கூடுதல் செலவானாலும் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.

என்னை அழைத்து ஊதியத்தைக் கணிசமாக உயர்த்திக் கொடுத்துள்ளதால் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி இனி நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதுமிருந்தால் கட்டணமில்லாத் தொலைபேசி (18005993540) எண்ணிற்குத் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனாலும், மூட்டைக்கு முப்பது ரூபாய் பெறப்படுகிறது என்கிற புகார் வருகிறது என்றால் எனக்கு வேதனையாக இருக்கிறது. இனி யாரேனும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையிலான அரசு தயங்காது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரையும் அழைத்து தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதோடு, இதை வலியுறுத்தி அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பக் கூறியுள்ளேன். விவசாயிகள் தங்கள் நெல்லிற்கு மூட்டை ஒன்றிற்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை” என்றார்.

இதையும் படிங்க:'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!

ABOUT THE AUTHOR

...view details