சென்னை:பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், இன்று (ஜன.22) தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகர் சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் உள்ள இடர்பாடுகளை நீக்குவதற்கான அது தொடர்புடைய பிற துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம், சென்னை மாநகரின் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை செயல்படுத்தும்போது உள்ள இடர்பாடுகளை களைவதற்கு, தொடர்புடைய துறைகளான எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு ரயில்வே, மின்வாரியம் மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
நெடுஞ்சாலைத்துறை கூட்டிய இவ்வாய்வுக் கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எல்காட், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தெற்கு ரயில்வே, மின்வாரியம், நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளை சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் '104' என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்