சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலையை இரண்டு அடுக்குப் பாலமாக அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
நேப்பியர் பாலத்தில் இருந்து கோயம்பேடு வரை 16 கிலோமீட்டர் தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது. பறக்கும் சாலையின் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலடுக்கில் துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அனுமதிக்கப்படும்.
சூடுபிடித்த கிடப்பில் போடப்பட்ட திட்டம்
தற்போது மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி பறக்கும் சாலைகளில் 7 உள்நுழைவுகளும், 6 வெளியேறும் வழிகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 3 மணி நேரமாக உள்ள கண்டெய்னர் லாரிகளின் பயண நேரம் 30 நிமிடங்களாக குறையும்.