தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிளாம்பாக்கம் மேம்பாலப்பணி ஒரு மாதத்திற்குள் நிறைவுறும் - அமைச்சர் எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு பேட்டி

கிளாம்பாக்கம் மேம்பாலப்பணி ஒரு மாதத்திற்குள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

By

Published : Jan 4, 2022, 9:01 AM IST

சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையிலுள்ள சுமார் 250 ஆண்டுகள் பழமையான புராதன கட்டடமான "ஹுமாயூன் மஹால்" புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (ஜன.3) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹீமாயூன் மஹால் கட்டடத்தினை ஆற்காடு நவாப் முகமது அலிக்கான், வாலாஜா என்பவருக்காக ஆங்கிலேய கட்டட கலைஞர் பால்பென் பீல்டால், 1764 - 1768ஆம் ஆண்டு தரைத்தளம் மட்டும் வடிவமைப்பு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அதன் பழைமை மாறாமல் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது போன்று 85 கட்டடங்கள் உள்ளன. முதல் கட்டமாக 35 பழைமை வாய்ந்த கட்டடங்களை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீரமைக்கும் பணிக்காக அரசு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஹுமாயூன் கட்டடத்தை சீரமைக்கும் பணிக்காக 41.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடம் முழுவதும் சுண்ணாம்புடன் நாட்டு முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பயன்படுத்தி பளபளப்புத் தன்மையுடன் கட்டடத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஹீமாயுன் மஹால் கட்டடம் 76 ஆயிரத்து 567 சதுரடி கொண்டது. சுமார் 250 ஆண்டு கால பழமை வாய்ந்தது. சென்னையை பொறுத்தவரை 20க்கும் மேற்ப்பட்ட பாரம்பரியமிக்க பழைமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளன.

சென்னையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கால நிலையை நம்மால் கணக்கிட முடியவில்லை. மழை பெய்து கொண்டிருக்கும் போது கூட தற்காலிகமாக சாலை போடும் பணி நடைபெற்றது. தற்போது பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

மேம்பால திட்ட மதிப்பீடு தயார்

பொதுப்பணித்துறை கட்டடங்கள் இதுவரை எந்தவித பாதிப்புக்கும் உள்ளானது இல்லை. திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையின் கீழ் கட்டப்படும் கட்டடங்கள் உரிய தரம் குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அரசு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை கட்டடங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் வலிமையாக கட்டப்படும்.

இந்தக் கட்டடம் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி ஆகஸ்ட் மாதத்தில் சீரமைக்கும் பணி முடிக்கப்படும். மதுரவாயல் துறைமுகம் மேம்பால திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் தொடர்ந்து பணிகளை விரைந்து தொடங்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த ஆண்டு மேம்பால பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

மதுரவாயல் மேம்பாலம் 2006ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதற்கான பணிகள் சீராக செயல்படவில்லை. கிளாம்பாக்கம் மேம்பாலப்பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்‌. சென்னையில் மேம்பால பணிகள் காலதாமதம் ஏற்படுவதற்கு காரணங்கள் நிலம் கையகப்படுத்துதல். போக்குவரத்து நெரிசல் ஆகும்.

பொதுவாக இரவு 11மணி முதல் காலை 6 மணி வரை மேம்பால பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் புதிய மேம்பால பணிகள் தொடங்கும்” என்றார்.

இதையும் படிங்க:TN Firing Range Case: 'குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை'

ABOUT THE AUTHOR

...view details