தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுஞ்சாலைகளை உடனடியாக செப்பனிட அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு - நெடுஞ்சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்

நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்
நெடுஞ்சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்

By

Published : Dec 5, 2021, 10:17 AM IST

சென்னை: கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சாலைகள் முழுவதும் சிதிலமடைந்தன. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, முதல் கட்ட நடவடிக்கையாக சென்னையில் உள்ள மழைநீர் அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து சென்னை நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட 258 கி.மீ சாலைகளை ஆய்வு செய்து அதில் 58 கி.மீ சாலைகள் சிதிலமடைந்ததை பார்வையிட்ட அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் மற்றும் கோட்டப் பொறியாளர்களுடன் கலந்தாலோசித்து சில நவீன தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி சாலைகளை சரி செய்ய உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் எ.வ.வேலு, தரமணி முதல் பெருங்குடி சாலை வரை நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து அதன் செய்முறைகளை பார்வையிட்டார்.

அப்போது நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் வேலு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:’சாலையில் நடக்கும் மோதல்களுக்கு கட்சி பொறுப்பாகாது'-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details