சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. நேற்றைய (ஆகஸ்ட் 27) விவாதத்தில் கடந்த காலத்தில் கிராமப்புறச் சாலைகள் தரம் உயர்த்தப்படவில்லை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்தும் திட்டம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம். அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திவந்தோம். 8000 கி.மீ. கிராமப்புறச் சாலைகள் தேர்வுசெய்யப்பட்டன.
இது ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம்
அதில் 6000 கி.மீ. சாலைகள் தரம் உயர்த்தும் பணி நிறைவுபெற்றுள்ளது. மாநிலச் சாலைகளாக இருந்தாலும், நெடுஞ்சாலைகளாக இருந்தாலும் முடிவுபெற்றச் சாலைகள்தாம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஜெயலலிதா கொண்டுவந்த இந்தத் திட்டத்திற்கு இ- டெண்டர்தான் விடப்பட்டது.
அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. எங்கள் மீது திட்டமிட்டு குற்றம் சுமத்துவதற்கென இதைப் பேசுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒப்பந்ததாரர்கள் தகுதிக்கேற்ற ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர். மேலும் எங்கள் ஆட்சியில்தான் அதிக சாலைகளை அமைத்திருக்கின்றோம்.
நில உரிமையாளர்களிடமிருந்து நிலம் எடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நில உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதால்தான் பணி தாமதமாகியுள்ளது” என்றார். இதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, “ஒரு மாவட்டத்தில் பல சாலைகள் உள்ளன. அதற்கான பணிகள் விரைந்து செயல்பட வாய்ப்பிருக்கிறது.
பேக்கேஜிங் சிஸ்டம் ரத்து