சென்னை:எ.வ. வேலு கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று (நவ. 12) சாலைகளிலும், வீதிகளிலும் சென்று ஆய்வுசெய்தார். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் சென்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்கள்.
கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை காரணமாக பெய்த கனமழையால் சென்னையின் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கக் கொளத்தூர் டி.ஆர்.ஜே. மருத்துவமனை, செந்தில் நகர் பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்ட குழிப்பள்ளங்களை 50-க்கு மேற்பட்ட சாலைப் பணியாளர்களைக் கொண்டு சீரமைக்கவும், வீனஸ் நகர், கணேஷ் நகர் கண்ணகி நகர், டெம்பிள் பள்ளி பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை மின் மோட்டார்களைப் பயன்படுத்தி நீரை வெளியேற்ற ஆணையிட்டார்.
சேதங்களை உடனடியாகச் சீரமைக்க
மேலும், வீனஸ் நகர், டெம்பிள் பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி நீர் வழித் தடங்களைச் சுத்தம் செய்ய கே.என். நேரு உத்தரவிட்டார். நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகளில், ஏற்பட்டுள்ள சேதங்களை உடனடியாகச் சீரமைக்கப் பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 475 சாலைப் பணியாளர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்கள் மூலமாகச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த கே.என். நேரு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளின்கீழ் உள் வட்டச் சாலையில் ரெட்டேரி அருகில் சிறுபாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.