தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகதாது - தமிழ்நாட்டின் உரிமையை காப்போம் - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை காப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

By

Published : Aug 27, 2021, 1:35 PM IST

Updated : Aug 27, 2021, 7:16 PM IST

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அவையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி,செல்வப்பெருந்தகை,வேல்முருகன், உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அப்போது மேகதாது அணை விவகாரத்தில் உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சட்டப்பூர்வ நடவடிக்கை வேண்டும்

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அப்போது, மேகதாது என்னும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதாகவும், இது கண்டனத்துக்கு உரியது என்றார். முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒற்றுமை தேவை

இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசினார். "நாம் ஒரு நிலையில் இருந்தால் இந்த பிரச்சனையில் வெற்றி பெற முடியும்.கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே மாதிரி தான் பேசுவார்கள். இரு மொழிக்கொள்கை , காவிரி பிரச்னையில் ஒன்றுபட்டு இருந்தால் எந்த சக்தியாலும் நம்மை வெல்ல முடியாது.

உரிமையை காப்போம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசும் போது பிரதமர் காட்டிய அக்கரைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்தவாரம் காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து காவிரி ஆணையம் பேசக் கூடாது. கர்நாடக முதலமைச்சர் நீதி தவறமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. தடுக்க வேண்டியதை தடுத்து, வாதாடும் இடத்தில் வாதாடி தமிழக மக்களின் உரிமையை காப்போம்" என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியீடு

Last Updated : Aug 27, 2021, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details