தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம்? அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர்​ துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் பதில்
அமைச்சர் துரைமுருகன் பதில்

By

Published : Jun 24, 2021, 10:27 PM IST

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் ஆளுநர் உரையில் இடம் பெறாதது குறித்து, விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர்​ துரைமுருகன், "திமுக ஆட்சிக்கு வந்து 40 நாள்கள்தான் ஆகிறது. நாங்கள் கங்கையையும் பிடிப்போம், காவிரியையும் பிடிப்போம். கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வந்தது நாங்கள் தான். நிச்சயமாக கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை செய்தே தீருவோம். நீங்கள் செய்யாமல் விட்டு சென்ற திட்டங்கள் பல உள்ளன. குண்டாறு நதிகள் இணைப்பு, தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு போன்ற திட்டங்களை கடந்த பத்து வருடங்களாக செய்யவில்லை" என்றார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் சில நதிநீர் இணைப்பு பணிகள் நில ஆர்ஜிதம் செய்வதில் இடையூறு ஏற்பட்டதன் காரணமாக அந்த பணிகளை செய்ய முடியவில்லை" என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "இவர்கள் ஏன் கடந்த பத்தாண்டுகளாக நதிநீர் இணைப்பிற்காக நில ஆர்ஜிதம் பணிகளை செய்யவில்லை" என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளியில் இதர கட்டணங்களை வசூலிக்க தடை விதியுங்கள்: ரவிக்குமார் எம்.பி

ABOUT THE AUTHOR

...view details