சென்னை: தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்! - அமைச்சர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
13:22 October 31
உடல் நலக்குறைவால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சையில் உள்ளார். உயிர் காக்கும் கருவிகளுடன் மிக அதிக சிகிச்சை கொடுத்து வரும் நிலையிலும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடும் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
TAGGED:
அமைச்சர் துரைக்கண்ணு