சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று (ஜூன் 21) சென்றார். அங்கு, இருதய பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை! - minister cv shanmugam
சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து அவருக்கு தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.
சி.வி. சண்முகத்திற்கு கரோனா தொற்று இல்லை
இந்நிலையில், அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கடந்த 18ஆம் தேதி சளி பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பரவலைத் தடுக்க மயிலாடுதுறையில் முழு கடையடைப்பு