சென்னை:மாமல்லபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு இல்லம், தொழிலாளர் நல பிரதிநிதிகள் தங்கி பயன்பெற்று வரும் ஜீவா இல்லம் ஆகியவற்றை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று (ஜூலை.6) ஆய்வு மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து நடந்த தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையேற்றார். இதில் குறைந்தபட்ச ஊதிய சட்டம், வேலையாள் இழப்பு சட்டம், பணிக்கொடை சட்டம், நிலுவையில் உள்ள பணியாளர்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.