சென்னை: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தொழிலாளர் நலன்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க, தனி தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
90 ஐடிஐகள் புனரமைப்பு
தமிழ்நாட்டில் உள்ள 90 ஐடிஐக்களில், கடந்த பத்து வருடங்களாக எந்தவித புனரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் பாழடைந்த கட்டடங்களாக காட்சி அளிக்கும், ஐடிஐக்களை ஆய்வு செய்து புனரமைக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.