தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமனம் - etv bharat

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் அதிகளவு விபத்துக்கள் நடப்பதால் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.வி.கணேசன்
அமைச்சர் சி.வி.கணேசன்

By

Published : Aug 31, 2021, 6:46 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 31) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தித்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் அதிகளவு விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் அசோகன் கோரிக்கை விடுத்தார்.

கூடுதல் பணியாளர்கள் நியமனம்

இதுகுறித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், "சிவகாசி பகுதியில் 1,131 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு தொழிலை நம்பி 50ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

இனி தொழிலாளர் நலன் இணை ஆணையர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்படும். அதேபோல் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறலாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

ABOUT THE AUTHOR

...view details