தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்' - chennai latest news

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

minister-cv-ganesan-new-announcements
minister-cv-ganesan-new-announcements

By

Published : Sep 5, 2021, 11:08 PM IST

சென்னை :சட்டப்பேரவையில் சனிக்கிழமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய 34 அறிவிப்புகள்

  • தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வீடில்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் சொந்த வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
  • போட்டித்தேர்வு வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை தொடங்கப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் இந்திய பொறியியல் பணி தேர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும். பல்வேறு தேர்வுகள் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் என அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக்கு என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தொழில் நிறுவனங்களின் தேவை சார்ந்து வளரும், வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளான ரோபாட்டிக்ஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஆக்குமெண்டெட் ரியலிடி கைபேசி செயலி உருவாக்கம்.
  • சைபர் பாதுகாப்பு எத்திகல் ஹேக்கிங் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரெடி ஆட்சிமுறை என்னும் செயற்கை நுண்ணறிவு ஆகிய திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • 2014-15ஆம் மற்றும் 16ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் சிறப்புப் புதுப்பித்தல் சலுகை 2017-2018, 2019ஆம் ஆண்டு வெளி பதிவை புதுப்பிக்க ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்கப்படும்.
  • செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை,தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் புதிதாக தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகங்கள் 6.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  • தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம் என்பதை தமிழ்நாட்டு சமையல்,உணவு தொழிலாளர்கள் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
  • கல்வி நலத்திட்ட உதவி தொகையாக ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • கட்டுமானத் தொழிலாளர்களின் பத்தாம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை ஆயிரத்தில் இருந்து 2400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கட்டுமான தொழிலாளர்களின் பதினொன்றாம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகை 1,000 ரூபாய், 12 ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள், தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகை 1,500 ரூபாயில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகையான முறையான பட்டப்படிப்பு படிப்பதற்கு 1500 ரூபாய், முறையான பட்டப் படிப்பினை விடுதியில் தங்கிப் படிப்பதற்கு 1,750 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரணம் உதவி தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியம் என்பதை தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதனால் சுமார் 10,000 அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
  • தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை முறையான பட்டப்படிப்பு படிப்பதற்கு 1500 ரூபாய் மற்றும் முறையான பட்டப்படிப்பினை விடுதியில் தங்கிப் படிப்பதற்கு 1,750 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
  • தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரிய ஓட்டுநர்கள் விபத்து மரணம் அடையும் நேர்வில் தற்போது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித்தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரிய ஓட்டுநர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 85,000 ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு உடலுழைப்பை தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் 15 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் 15 நல வாரியங்களின் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடையும் நேர்வில் அவர்களது குடும்பத்திற்கு தற்போது வழங்கப்படும் விபத்து மரணம் உதவித் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 1.25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் 15 நல வாரியங்களின் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரணம் உதவித் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம் 3.72 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
  • தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கு புதியதாக 7 பணியிடங்கள் 18. 70 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
  • மாநிலத்தின் திறன் மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் சிறந்த மாவட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்களில் ஒரு லட்சம் பேருக்கு பணி திறன் மற்றும் அனுபவத்தை அங்கீகரித்து திறன் மதிப்பீடு செய்து உரிய சான்றிதழ் வழங்கப்படும்.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி பெற்றவர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க ஒருங்கிணைந்த ஒற்றை திறன் தொகுதி உருவாக்கப்படும்.
  • தேசிய திறன் தகுதி கட்டமைப்பிற்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கும் தொழில் பயிற்சி நிலையங்களை நிர்வகிக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பயிற்சிப் பிரிவு உள்ள சில பணியிடங்களை மறுசீரமைத்தல்.
  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பயிற்சிப் பிரிவில் கணினி மயமாக்கல் மூலம் திட்டங்களை கண்காணிக்கவும் மின் ஆளுமை மூலம் நிர்வாகப் பணிகளை செயல்படுத்த தகவல் தொழில்நுட்ப கண்காணிப்புப் பிரிவு அமைப்பு ஏற்படுத்தப்படும்.
  • மாவட்ட அளவில் திறன் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்திட திறன் பயிற்சி அலுவலகங்கள் இல்லாத 8 மாவட்டங்களில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் தொடங்கப்படும். (செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை,தென்காசி )
  • திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு, வழிகாட்டு மையம், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்டுதல்.
  • அக வளாக / புற வளாக அவசரகால ஆயுத்தம் இலை மாதிரி ஒத்திகை குறித்த குறும்பட தயாரித்தல். இந்த குறும்படம் 30 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்.
  • தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அலுவலர்களுக்கு ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்து பயிற்சி ரூபாய் 25 லட்சம் செலவில் வழங்குதல்.
  • தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணையவழி செயல்பாடுகளில் மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் ரூபாய் 1.73 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்படுத்துதல்.
  • செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு,தொழில் நெறி வழி காட்டும் மையங்கள் அமைத்தல்.

இதையும் படிங்க : வ.உ.சியின் நினைவுகள் போற்றப்பட வேண்டும் - கனிமொழி எம்.பி

ABOUT THE AUTHOR

...view details