சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த விவாதத்திற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது அர. சக்கரபாணி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.