அமைச்சர் பெஞ்சமின் அவதூறு பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டு வாக்கு எண்ணும் மையம் அமைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமை வழக்கறிஞர் நீலகண்டன் மற்றும் பச்சையப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் பேசுகையில், “சட்டப்பேரவை பொதுத்தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு திமுக சார்பில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். அதிமுகவினர் பலமுறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்துக் கூறினோம். நேற்று (ஏப்.6) வாக்குப்பதிவின்போது அதிமுக அமைச்சர் பெஞ்சமின், திமுகவைச் சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்டோரை கொச்சையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.