சென்னை:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் சென்னை ஐஐடி இணைந்து தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் பயிற்சி முகாமை நடத்துகிறது. இந்த முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஜனவரி 5) தொடங்கி வைத்தார்.
அதோடு மாணவர்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆரோக்கியம் என்னும் குறுந்தகட்டையும் அமைச்சர் வெளியிட்டார். அதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பம் என்னும்போது எலக்ட்ரானிக் ஸ்கூட்டர், பேட்டரி கார் என்று கூறுகிறோம். தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது.
முன்பு இளம் கண்டுபிடிப்புகளுக்கு டெல்லியில் சென்றுதான் காப்புரிமை பெற வேண்டிய நிலை இருந்தது. தற்போது சென்னையிலேயே காப்புரிமை பெற முடியும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மின்னணுவியல் பயிற்சியை அளிக்க அரசு 25 லட்சம் ரூபாய் செலவிடுகிறது.