சென்னை:Minister Anbil Mahesh speech:நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திருக்கோயில்கள் சார்பில் நடைபெற்று வரும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அரசு உதவிபெறும் 24 பள்ளிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் 88 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் ஐந்து ஆண்டுகள் முடித்து பதவிக்கான தகுதிப்பெற்று, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பத்து ஆசிரியர்களைப் பணி வரன்முறை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 78 பணியிடங்களை விரைவில் நியமனம் செய்ய விவாதிக்கப்பட்டது. அதேபோல் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 33 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் ஐந்து ஆண்டுகள் முடித்து பதவிக்கான தகுதிப்பெற்று தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 5 பணியாளர்கள் பணி வரன்முறை செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மீதமுள்ள 28 பணியிடங்களை விரைவில் நியமனம் செய்ய விவாதிக்கப்பட்டது.