தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ் - schools opening

தமிழ்நாட்டில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடத்தில் பேசிய அன்பில் மகேஷ்
செய்தியாளர்களிடத்தில் பேசிய அன்பில் மகேஷ்

By

Published : Jan 25, 2022, 6:58 AM IST

Updated : Jan 25, 2022, 7:04 AM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (ஜன.24) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

செய்தியாளர்களிடத்தில் பேசிய அன்பில் மகேஷ்

அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். மாணவி பயின்ற பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் நடக்கக் கூடாது. மதமாற்றம் தொடர்பாக மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உதவி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம்” என தெரித்துள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ எடுத்தது யார் ? அது மாணவியின் குரல் தானா? - நீதிபதி கேள்வி

Last Updated : Jan 25, 2022, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details