தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’போலி உத்தரவுக்கு பணம் கொடுத்தவர்கள் புகார் அளியுங்கள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ் - அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற்றம்

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி உத்தரவைக் கொடுத்து பணத்தை ஏமாற்றியவர்கள் குறித்து இளைஞர்கள், பெற்றோர் ஆகியோர் தைரியமாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில்அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ்

By

Published : Sep 29, 2021, 11:05 PM IST

Updated : Sep 30, 2021, 8:53 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக கல்வி துறை அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகம் ஆலோசனை மேற்கொண்டார்.

பள்ளிகளை சுத்தம் செய்ய உத்தரவு

கூட்டத்துக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் முழுவதும் தூய்மையாக இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் பள்ளிகளை சுத்தம் செய்ய உத்தரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதோ, அதே நடைமுறை இதிலும் பின்பற்றப்படும். பள்ளிகள் திறப்பிற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொடர்ந்து துறை ரீதியாக நடைபெறும் பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

பணம் கொடுத்து ஏமாந்தோர் புகார் அளிக்க கோரிக்கை

குழந்தைகள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அதனை சரியான முறையில் கண்காணிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். யாரை நம்பியும் அரசு வேலைக்காக போலி உத்தரவை பெற்று பணம் கொடுக்க வேண்டாம். தயவு செய்து இது தொடர்பாக இளைஞர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விழிப்புணர்வுடன் இருங்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் அளிக்க பெற்றோர்கள் தைரியமாக முன் வர வேண்டும். புகார் அளிக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடி உத்தரவாதம் கொடுக்கிறோம்.

மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மாணவர்கள் வருகைப்பதிவு பொறுத்து பின்னர் முடிவு செய்யப்படும். தற்போது பள்ளி அளவில் சிறு, சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிக் கட்டடங்கள் ஆய்வுக்கு உத்தரவு

மாணவர்கள் வருகையை அதிகரிக்க உடனே தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களே நம்பி பள்ளிக்கு வாருங்கள், உங்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை.

முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் குறித்த அறிவிப்பு இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்” என்றார்.

இதையும் படிங்க:ஜெயலலிதா போல் செயல்படும் மு.க. ஸ்டாலின்! - புகழாரம் சூட்டும் செல்லூர் ராஜு

Last Updated : Sep 30, 2021, 8:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details