சென்னை:தமிழகத்தில்1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூன் மாதம் 1 ஆம் தேதி, 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலும், அதே போன்று ஜூன் மாதம் 5ஆம் தேதி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திட்டமிட்டவாறு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், “பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைப்பது குறித்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களால் வகுப்பறையின் சிரமமின்றி அமர முடியாது. இதனால் அனைத்து மாவட்ட கல்வி அலுவர்களுடனும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடமும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு 2 தேதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இருந்தால், அனைத்து வகுப்புகளுக்கும் தான் மாற்றம் இருக்கும்” என தெரிவித்து இருந்தார்.