தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லவை எடுத்துக்கொள்ளப்படும் - அன்பில் மகேஷ் - தேசிய கல்விக் கொள்கை நல்லதை எடுத்துக் கொள்ளலாம்

புதிய கல்விக் கொள்கையில் நல்ல திட்டங்களை எடுத்துக்கொண்டு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Dec 9, 2021, 5:22 PM IST

சென்னை:மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது என்று, எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுக வலியுறுத்தியது. ஆளுங்கட்சியாக வந்த பிறகும் அந்தக் கருத்தில் உறுதியாக இருப்பதாக திமுக கூறிவருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றும், அதற்கு மாறாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் துணைவேந்தர்கள் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

தற்போது ஆளுநரின் இந்தக் கருத்தை ஏற்கும்வகையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் வழங்கிய உதவித்தொகையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அதன் பின்னர் பேசிய அவர், "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய நல்ல திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் கல்விக் கொள்கைக்கு பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தலாம். தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான உயர்மட்டக் குழுவினரின் பெயர்கள் முதலமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் வந்த உடன் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இந்தத் திட்டம், ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி: 3 ராணுவ வாகனங்கள் வருகை

ABOUT THE AUTHOR

...view details