சென்னை: பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் நிறைகளை கண்டறிந்து, 100 நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இருக்கும் பள்ளிகளை சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆய்வு செய்வதற்கான ‘234/77’ என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி உள்ளது.
அந்த வகையில், இதுதொடர்பான ஆய்வு பயணத்தின் இரண்டாவது பணியாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலனுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
234/77 திட்டத்தின் கீழ் பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் இதனைத்தொடர்ந்து அண்ணாநகர் தொகுதியில் அமைந்துள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் மோகனுடன் இணைந்து அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் அப்பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் உடன் இருந்தார்.
இதையும் படிங்க:‘ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் ஆய்வு செய்ய வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை